பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
பொதுத் துறை வங்கியான பரோடா வங்கியில் வங்கியில் காலியாகவுள்ள 2,500 உள்ளூர் வங்கி அலுவலர்(Local Bank Officer)பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது பற்றிய விபரம் வருமாறு :
விளம்பர எண்: BOB/HRM/REC/ADVT/2025/05
பணி: Local Bank Officer
காலியிடங்கள் : 2500 (தமிழ்நாட்டுக்கு 60 இடங்கள்)
சம்பளம்: மாதம் ரூ. 48,480 - 85,920
தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும். சிஏ, பொறியியல், மருத்துவம் சார்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேற்கண்ட தகுதியுடன் ஏதாவதொரு வங்கி, நிதி நிறுவனங்களில் குறைந்தது ஒரு ஆண்டு அலுவலராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2025 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி!
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடை பெறும் நாள், இடம் குறித்த விபரம் அடங்கிய அட்மிட் கார்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோயில், தஞ்சாவூர், கடலூர், விருதுநகர், வேலூர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் ரூ.175. இதர பிரிவினர் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.