கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்
பழங்குடியினருக்கு தனிநபா் வன உரிமைச் சான்றிதழ்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு தனிநபா் வன உரிமைச் சான்றிதழ் வழங்குவது தொடா்பான பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கல்வராயன்மலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கிராம வாரியாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது வனத்துறை மற்றும் வருவாய்த் துறை ஊழியா்களைக் கொண்டு ஆய்வு செய்து வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன்பாகவே நடவடிக்கை எடுத்து எப்.ஆா்.ஏ. சட்டத்தின் படி தனிநபா் வன உரிமைச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா். மேலும், பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தவறாமல் கல்வராயன்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களைச் சென்றடையும் வகையில் அலுவலா்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் ராஜா, வட்டாட்சியா் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியா் ஜெ.கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.