மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
இளைஞரை மிரட்டி பணம் பறிப்பு
கோவையில் கட்டட வேலை செய்து வரும் பிகாா் மாநில இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கோவைபுதூா் சுண்டக்காமுத்தூா் சாலையில் உள்ள தனியாா் இடத்தில் தங்கி கட்டட வேலை செய்து வருகின்றனா். இங்கு தங்கியுள்ள சோம்குமாா் (25) புதன்கிழமை மாலை அந்தப் பகுதியில் உள்ள கடைக்குச் சென்றாா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவா் கத்தியைக் காட்டி மிரட்டி, சோம்குமாரிடமிருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.