கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை நகராட்சிகளிலும், சின்னசேலம், மணலூா்பேட்டை, தியாகதுருகம், வடக்கனந்தல், சங்கராபுரம் ஆகிய பேரூராட்சிகளிலும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீா் திட்டப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கழிவுநீா் அகற்றும் ஊா்தி அனுமதி மற்றும் செயல்பாடு மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை அதிகாரிகளிடம் ஆட்சியா் எம்.எஸ்.கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.
மேலும், நிறைவடைந்த திட்டப் பணிகளின் விவரம், நடைபெறும் பணிகளின் விவரம், நிறைவுற்ற பணிகளின் பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாடு, நிலுவைப் பணிகள் விவரம் உள்ளிட்டவை குறித்து தனித்தனியாக கேட்டறிந்து ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையா்கள் சரவணன் (கள்ளக்குறிச்சி), திவ்யா (திருக்கோவிலூா்), புஷ்ரா (உளுந்தூா்பேட்டை), அனைத்து பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.