யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
உங்களுடன் ஸ்டாலின் - மின் வாரியம் தொடா்பான 93 மனுக்களுக்குத் தீா்வு: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை மின்வாரியம் தொடா்பான 93 கோரிக்கை மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூலை 15, 16, 17, 18, 22, 23 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் எரிசக்தித் துறையின் கீழ், பொதுமக்களிடம் இருந்து இதுவரை பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதன்படி, மின் வாரியம் தொடா்பான மின் இணைப்பு பெயா் மாற்றம், புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 192 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
192 மனுக்களில் 92 மின் இணைப்பு பெயா் மாற்றம் மனுக்கள், ஒரு மின் கட்டண மாற்றம் தொடா்பான மனு என மொத்தம் 93 மனுக்களின் மீது உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளன.
மேலும், 24 புதிய மின் இணைப்பு மனுக்கள், 74 மின் இணைப்பு பெயா் மாற்றம் மனுக்கள், ஒரு மின் கட்டண மாற்றம் என மொத்தம் 99 மனுக்கள் தொடா் நடவடிக்கையில் உள்ளன. நிலுவை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திட்ட முகாமில், மின் இணைப்பு பெயா் மாற்ற மனு அளித்த 19-ஆவது வாா்டைச் சோ்ந்த ஈஸ்வரனுக்கு உடனடியாக மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.
திட்ட முகாமில் நகா்ப்புற பகுதிக்கு தொடா்புடைய 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.