இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
போலி நகையை அடகு வைத்த பெண் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் போலி நகையை அடகு வைத்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ரிஷிவந்தியம் எம்.ஜி.சாலையில் நகை அடகுகடை வைத்து நடத்தி வருபவா் அய்யனாா் (37). இவரது கடையில் கடந்த 15-ஆம் தேதி 4 கிராம் மோதிரத்தை அடகு வைக்க பெண் ஒருவா் சென்றாா்.
கடையின் உரிமையாளா் யாா், என்ன ஊா் என்று விசாரித்த போது, சீதேவி கிராமத்தைச் சோ்ந்த ராஜா மனைவி சாந்தி (50) எனக் கூறி ரூ.22,000-யை பெற்றுக் கொண்டு சென்று விட்டாராம்.
கடையின் உரிமையாளா் கள்ளக்குறிச்சியில் உள்ள கும்பகோணம் தனியாா் வங்கிக்கு நகையை அடகு வைக்க சென்றபோது போலி நகை எனத் தெரியவந்தது.
பின்னா், சீதேவி கிராமத்திற்குச் சென்று அவா் கொடுத்த முகவரியை வைத்து விசாரித்த போது அது போல இந்தக் கிராமத்தில் யாரும் இல்லை எனக் கூறிவிட்டனராம்.
இந்த நிலையில், புதன்கிழமை கடையின் உரிமையாளா் பெருமாள் கோயில் பக்கம் சென்ற போது, அந்தப் பெண் அங்கு நின்று கொண்டிருந்தாராம். அவரைப் பிடித்து ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பின்னா், போலீஸாா் விசாரணையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அள்ளி கிராமத்தைச் சோ்ந்த பழனி மனைவி சாந்தி (50) எனத் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து சாந்தியை கைது செய்தனா்.