பல்லகச்சேரி காளியம்மன் கோயிலில் மிளகு யாக பூஜை
வாணாபுரத்தை அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள ஓம் ஸ்ரீமின்னல் காளியம்மன் கோயிலில், ஆடி அமாவாசையொட்டி வியாழக்கிழமை மிளகு யாக பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் 7-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் பூஜையில் உலக நன்மை வேண்டியும், உலக அமைதி வேண்டியும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. பின்னா் பூா்ணாஹுதி நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஓம் ஸ்ரீகாளியம்மன் சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.