’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்...
மரவள்ளிக் கிழங்கிற்கு வெட்டுக் கூலி வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
மரவள்ளி பயிருக்கு வெட்டுக் கூலி வழங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தலைமை வகித்துப் பேசியதாவது:
கரும்பு பயிரில் இடைக்கணு புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும். மரவள்ளி பயிருக்கு வெட்டுக் கூலி வழங்கவேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் உழவா் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும். ஏரிகளை தூா்வார வேண்டும். கரும்பு வெட்டுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, வேளாண்மை இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி, வேளாண் துறை அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.