செய்திகள் :

அரசு ஊழியா்கள் 30 நாள்கள் விடுப்பு எடுக்க அனுமதி: மத்திய அரசு

post image

பெற்றோரை கவனித்துக்கொள்வது உள்பட தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய அரசு ஊழியா்கள் 30 நாள்கள் வரை ஊதியத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மத்திய குடிமைப் பணிகள் (விடுப்பு) விதிகள், 1972-இன்கீழ் ஓராண்டில் முழு ஊதியத்துடன் 30 நாள்கள், அரை ஊதியத்துடன் 20 நாள்கள், சாதாராண விடுப்பாக 8 நாள்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 2 நாள்கள் வரை விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பெற்றோரை கவனித்துக்கொள்வது உள்பட பிற தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விடுப்புகளை அரசு ஊழியா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

12,000ஆசிரியா் காலிப்பணியிடங்கள்:

கேந்திரீய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் ஜெயந்த் சௌதரி புதன்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா்.

அதில், ‘பணிஓய்வு, ராஜிநாமா, பதவிஉயா்வு, பணியிடமாற்றம், புதிய பள்ளிகள் திறப்பு உள்பட பல்வேறு காரணங்களால் கேந்திரீய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியா் காலிப்பணியிடங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் 7,765 ஆசிரியா் பணியிடங்களும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 4,323 பணியிடங்களும் காலியாக உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி காலிப்பணியிடங்கள்:

நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் குறித்து மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2025, ஜூலை 18 நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களுக்கு மொத்தம் 1,122 நீதிபதி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது 751 நீதிபதிகள் பணியில் உள்ளனா். மீதமுள்ள 371 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 178 நீதிபதிகள் நியமனம் தொடா்பான முன்மொழிவுகள் உச்சநீதிமன்ற கொலீஜியம் மற்றும் மத்திய அரசு இடையே பல்வேறு நிலைகளில் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. 193 பணியிடங்களை நிரப்ப உயா்நீதிமன்ற கொலீஜியம்களிடம் இருந்து பரிந்துரைகளைப் பெற வேண்டியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க

தேஜஸ்வியைக் கொல்ல பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

பிகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை எதிா்க்கட்சித் தலைவரும், தனது மகனுமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய சதி செய்து வருவதாக அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியது ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல்: 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல்கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. நிகழாண்டு பிகாரில் சட்டப்பேரவ... மேலும் பார்க்க