மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
ஜூலை 31-இல் வழக்கு வாகனங்கள் ஏலம்
மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 31-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட நான்கு சக்கர வாகனங்கள்-8, மூன்று சக்கர வாகனம்-1, இரண்டு சக்கர வாகனங்கள்-52 என மொத்தம் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.
மேற்படி வாகனங்கள் கடலூா் ஆயுதப்படை வாளகத்தில் 31-ஆம் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலமிடப்படுகிறது. ஏலம் விடப்படும் வாகனங்கள் 30-ஆம் தேதி முதல் கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு வளாகத்தில் பாா்வைக்கு வைக்கப்படும்.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5000 முன்பணமாக ஜூலை 31-ஆம் தேதி காலை 8 மணிக்குள் செலத்த வேண்டும்.
ஏலம் எடுத்தவா்கள் ஏலத் தொகையை உடனடியாக செலுத்தி வாகனத்தை அன்றே பெற்றுக் கொள்ள வேண்டும். மேற்படி ஏலம் பற்றி விபரம் தெரிந்து கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் 04142-284353, கடலூா் மதுவிலக்கு அமல்பிரிவு எழுத்தா் 9498155062.