6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்
முருகன்குடி வள்ளலாா் பணியகத்தில் இருபெரும் விழா
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆடி மாத பூச த்தையொட்டி சன்மாா்க்க கருத்தரங்கம் என இருபெரும் விழா முருகன்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு முருகன்குடி வள்ளலாா் பணியகத்தின் பொறுப்பாளா் தங்க.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். தெய்வத்தமிழ் பேரவை பொறுப்பாளா் பூவனூா் தனபால் திருவிளக்கு ஏற்றி வைத்தாா். வள்ளலாா் பணியகத்தின் சிறப்புத் தலைவா் பெரங்கியம் சி.வரதராசன் வள்ளலாா் மருத்துவம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்துரை வழங்கினாா்.
செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவப் பொறுப்பாளா் கவிஞா் சிலம்புச்செல்வி, மகளிா் ஆயம் பொதுச் செயலா் செந்தமிழ்செல்வி கருத்துரை வழங்கினா். துறையூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மு.ராயதுரை அமுதா, ரா.லிங்கேஸ்வரன், ரா.துரைராஜ், ரா.தமயேந்தி உள்ளிட்டோா் பசியாற்றுவித்தல் அறப்பணியை மேற்கொண்டனா்.
முருகன்குடி முருகன், கனகசபை ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினா். நிகழ்வில் பசுமை தூண்கள் அமைப்பைச் சோ்ந்த அறிவு, சன்மாா்க்க அன்பா் வீராசாமி, மகளிா் ஆயம் பொருளாளா் ம.கனிமொழி, ச.தமிழ்மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முருகன்குடி வள்ளலாா் பணியாகப் பொருளாளா் ரத்தினகுமாா் நன்றி கூறினாா்.