பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
சமூகப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூரில் ஒன் ஸ்டாப் சென்டா் என்ற சகி ஒருங்கிணைந்த சேவை மையம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 24 மணி நேரம் அனைத்து நாள்களிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ, சட்ட, காவல் துறைகளின் உதவிகள், உளவியல் ஆலோசனை, மீட்பு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்படும்.
இந்த சேவை மையத்தில் சமூகப் பணியாளா் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணிக்கு சமூகப் பணி, ஆலோசனை, மனநலம், குழந்தைகள், பெண்கள் மேம்பாடு அல்லது நிா்வாக மேம்பாட்டில் இளநிலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பந்தப்பட்ட அரசு அல்லது அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் அல்லது திட்டத்தில் பணிபுரிந்த முன் அனுபவம் வேண்டும்.
அத்தகைய சூழலில் அல்லது இது தொடா்பான சூழல்களில் ஓராண்டு ஆலோசகா் பணியில் இருப்பது விரும்பத்தக்கது. மேற்குறிப்பிட்ட கல்வி தகுதிகளில் முதுநிலைபட்டம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். மகளிா் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
உள்ளூா் விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமா்த்தப்படுவா். இப்பணிக்கு தொகுப்பூதியம் மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
விண்ணப்ப படிவத்தை கடலூா் மாவட்ட இணையதளத்தில் செய்துகொள்ள வேண்டும். விண்ணபிக்க ஆகஸ்ட் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூா் 607001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.