பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
போக்குவரத்து விதி மீறல்: வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் எச்சரிக்கை
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸாா் எச்சரித்தனா்.
பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளா் முரளி ஆகியோா் மினி சரக்கு வாகன ஓட்டுநா்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அப்போது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது. அபாயகரமான பொருள்களை வெளியே நீட்டியபடி ஏற்றிச் செல்லக் கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது. வாகனத்தை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.
மேலும், சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்களின் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். இதையடுத்து, அனைவரிடமும் சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கினா்.