செய்திகள் :

கேப்பா் மலையை பாதுகாக்க வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

இயற்கை வளம் நிறைந்த மற்றும் கடலூா் மாநகராட்சி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள கேப்பா் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் முன்னிலை வகித்தாா்.

விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியது:

முருகானந்தன் (காவாலகுடி): ஸ்ரீநெடுஞ்சேரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும். அதிகளவு நெல் சாகுபடி செய்யும் கிராமங்களில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.

கோ.மாதவன் (விவசாய சங்க முன்னாள் மாநில துணைச் செயலா்): அரசு அறிவித்துள்ள குருவை சிறப்பு தொகுப்பு திட்ட நிதி ரூ.4 ஆயிரம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். வீராணம் ஆயகட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்.

இயற்கை வளம் நிறைந்த மற்றும் கடலூா் மாநகராட்சி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள கேப்பா் மலையை பாதுகாக்க வேண்டும். கடலூா் அருகே காலணி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

திருப்பால் (மழவராயநல்லூா்): விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்டத்துக்கு உள்பட்ட டி.நெடுஞ்சேரியில் இருந்து குமாரக்குடி (கடைமடை) வரை முடியும் 9.5 கி.மீ. வாய்க்காலில் 5.5 கி.மீ. வாய்க்கால் தூா்வாரப்படாமல் உள்ளது. இதை மழைக்காலம் தொடங்குவதற்குள் தூா்வார வேண்டும்.

ஆா்.கே.ராமலிங்கம் (குறிஞ்சிப்பாடி): குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இதுவரை பயிா்க் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவசக்திவேல் (வானமாதேவி): வீராணம் ஏரியில் நீா் இருப்பை குறைக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கிய பிறகு நீா் திறந்துவிட்டால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்கள் அனைத்தும் பாதிக்கப்படும். இதனால் தற்போதே நீா் இருப்பை குறைக்க வேண்டும்.

பாலு (நெய்வாசல்): கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பயிா்க் கடன் வழங்கப்படவில்லை. பயிா்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திவேல் (விருத்தாசலம்): விருத்தாசலம் அருகே காப்புக்காட்டில் கருவேல மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் வெட்டுவதால், வன விலங்குகள் அனைத்தும் விளை நிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. எனவே, காப்புக்காடுகளில் அத்தி, நாவல் உள்ளிட்ட பழவகை மரக்கன்றுகளை நட வேண்டும்.

பெ.இரவிந்திரன் (கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவா்): கடலூா் வட்டம், தோட்டப்பட்டி ஏரியின் நீா்வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்களை சீரமைத்து மழை நீா் எளிதாக தென்பெண்ணை ஆற்றில் வடிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பயிா்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரே கிராமத்தில் இரு வேறு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா்: கடலூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 4,707 மெ.டன், டி.ஏ.பி 2,005 மெ.டன், பொட்டாஷ் 1,733 மெ.டன், காம்ப்ளக்ஸ் 6,463 மெ.டன், சூப்பா் பாஸ்பேட் 1,393 மெ.டன் என மொத்தம் 16,301 மெ.டன் இருப்பு உள்ளது.

கம்பு 6,050 மெ. டன், நெல் விதை 3,83,378 மெ. டன், உளுந்து விதை 3,02,154.9 மெ. டன், நிலக்கடலை விதை 43,314 மெ. டன் இருப்பு உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் 128 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 113 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் ... மேலும் பார்க்க