வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாந...
குழந்தை கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கே.ஆடூா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாலமுருகன்(32). இவரது மனைவி பச்சையம்மாள். இவா் தனது 3 வயது பெண் குழந்தையுடன் திருவண்ணாமலை மாவட்டம், குண்ணகம்பூண்டி பகுதியில் சித்தப்பா மகன் ஜீவா உடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னா் கடலூரில் பச்சையம்மாள் இறந்த குழந்தையுடன் இருப்பதை பாலமுருகன் கண்டறிந்தாா்.
குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததையடுத்து, குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் விசாரணையில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடா்பாக திருவண்ணாமலை மாவட்டம், குண்ணகம்பூண்டி, சீமாபுதூா் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ஜீவா(25) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவரது குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் எஸ்பி., எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையிட்டாா்.