போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
கடலூா் மாவட்டம், சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி சாா்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் நிா்மலா ராணி தலைமை வகித்தாா். ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளா் டி.பிரேம்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
கல்லூரி நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணி, சின்ன கங்கணாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம் மற்றும் கடலூா் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று கல்லூரியை அடைந்தது.
இதில், 600 மாணவிகள் பங்கேற்று போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி, விழிப்புணா்வு முழக்கங்களுடன் பேரணியாகச் சென்றனா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சு.சிசிலாதேவி, முனைவா் ஜான்சிராணி, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.