மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், பில்லாலி தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் வைகுண்டம்(60). இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவா் ஆனந்தன்(80). இவா் புதிதாக வீடு கட்டுவதற்கான செங்கல், மணலை வைகுண்டம் வீட்டு வாசலில் இறக்கினாா்.
இதனை, வைகுண்டம் கடந்த 18-ஆம் தேதி தட்டிக்கேட்டுள்ளாா். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தினா் வைகுண்டம், அவரது மனைவி சின்னபொண்ணு ஆகியோரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து சின்னபொண்ணு அளித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் ஆனந்தன், அவரது மனைவி அஞ்சலை, மகன்கள் புஷ்பலிங்கம்(25), புஷ்பராஜ்(22) ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.