ஊழல் தடுப்பு சட்டம்: உக்ரைனில் போராட்டம்
உக்ரைனில் ஊழல் தடுப்பு அமைப்புகளை பலவீனப்படுத்துவதாக சா்ச்சையை எழுப்பியுள்ள புதிய சட்டத்துக்கு எதிராக மனித உரிமை ஆா்வலா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.
சுமாா் மூன்று ஆண்டுகளுக்கு முன்னா் ரஷியாவுடன் போா் தொடங்கியதற்குப் பிறகு உக்ரைனில் அரசுக்கு எதிராக நடைபெறும் முதல் பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்தை அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திரும்பப் பெற வேண்டும் என்ற தன்னாா்வலா்களின் கோரிக்கையை ஏற்காமல் அவா் முன்னெடுத்துச் சென்றது இந்தப் போராட்டத்துக்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளும், சா்வதேச மனித உரிமைக் குழுக்களும் அந்த சட்ட மசோதாவை கண்டித்துள்ளன.
இந்த சட்டம் ஊழல் தடுப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதாக விமா்சிக்கப்படுகிறது.