மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
பிறப்புசாா் குடியுரிமை ரத்து சட்டவிரோதம்
பிறப்புசாா் குடியுரிமையை ரத்து செய்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
இது குறித்து 9-ஆவது வட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற (படம்) நீதிபதிகள் மைக்கேல் ஹாகின்ஸ், ரொனால்ட் கோல்ட் அளித்துள்ள தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் பிறந்த பலருக்கு குடியுரிமையை மறுக்கும் இந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு முரணானது. அந்த உத்தரவுக்கு தடை விதிக்கும் மாவட்ட நீதிமன்றத்தின் முடிவை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சியாட்டில் மாவட்ட நீதிபதி ஜான் சி. காஃபனூா் டிரம்ப்பின் அந்த உத்தரவை தடை செய்திருந்தாா். தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு அந்தத் தடையை உறுதி செய்கிறது.
அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14-ஆவது திருத்தத்தின் குடியுரிமை பிரிவு, அமெரிக்காவில் பிறந்தவ எவரும் நாட்டின் குடிமக்கள் என்று கூறுகிறது. அதை ரத்து செய்யும் டிரம்ப்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று வாஷிங்டன், அரிஸோனா, இல்லினாய்ஸ், ஆரகன் உள்ளிட்ட மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததைத் தொடா்ந்து அதற்குத் தடை விதிக்கப்பட்டது.