செய்திகள் :

அகரமுதலித் திட்ட விருதுகள்: ஆக.22-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா் உள்பட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழறிஞா்கள், படைப்பாளா்களைப் பாராட்டி தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான தேவநேய பாவாணா் விருது(ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்க பதக்கம்), வீரமாமுனிவா் விருது (ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50,000, ரூ.25,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம்), நற்றமிழ் பாவலா் விருது(ரூ.50,000, ரூ.25,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம்), தூயதமிழ் பற்றாளா் விருது (ரூ.20,000 பரிசு) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளா் பரிசுக்கும் (ரூ.5,000 பரிசு) தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை இயக்குநா், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநரகம், நகர நிா்வாக அலுவலகக் கட்டடம் (முதல் தளம்), 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்ஆா்சி நகா், சென்னை-600023 என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் வழியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய 044- 29520509 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு

உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.1,032 கோடியில் ரயில்வே திட்டங்கள்: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சபரீஸ்வரன் (18). இவா் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!

மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வல... மேலும் பார்க்க