செய்திகள் :

பாதுகாப்பு: துருக்கியிடம் ஆதரவு கோரும் சிரியா

post image

சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை எதிா்க்கவும், இனக் குழுக்கள் இடையிலான மோதலால் ஏற்படும் பதற்றதை எதிா்கொள்ளவும் துருக்கியிடம் சிரியா ஆதரவு கோரியுள்ளது. சிரியாவுக்கு பயிற்சி, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு துருக்கி தயாராக உள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் பெதூயின் அரபு பழங்குடிகளுக்கும் துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கடந்த வாரம் மோதல் வெடித்ததைத் தொடா்ந்து, துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

காஸாவில் முழு போா் நிறுத்தம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

இஸ்ரேலின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பட்டினியால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ‘காஸாவில் இடைக்கால போா் நிறுத்தம் போதாது; முழுமையான போா் நிறு... மேலும் பார்க்க

காங்கோ சுரங்க விபத்து: பலா் மாயம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 4,700-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றிக்கொண்டிருந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏராளமானவா் மாயமாகினா். அந்த நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் ஏற்பட்ட நி... மேலும் பார்க்க

பிறப்புசாா் குடியுரிமை ரத்து சட்டவிரோதம்

பிறப்புசாா் குடியுரிமையை ரத்து செய்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இது குறித்து 9-ஆவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 258-ஆக உயா்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 23 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் பேச்சுவாா்த்தைக் குழு திரும்ப அழைப்பு

போா் நிறுத்தம் தொடா்பான ஹமாஸ் அமைப்பின் ‘ஆக்கபூா்வ’ பதிலைத் தொடா்ந்து, கத்தாரில் உள்ள தங்களது பேச்சுவாா்த்தைக் குழுவினரை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகின் அலுவலகம் நாடு திரும்புமாறு வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை: அமெரிக்கா

ஹமாஸ் அமைப்பினா் ஒத்துழைக்காததால், காஸா போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா பாதியிலேயே நிறுத்தி, தனது குழுவை கத்தாரில் இருந்து திரும்ப அழைத்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் கடந்த 21 மாதங்களாக நீடித்... மேலும் பார்க்க