செய்திகள் :

ஜூலை 26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் ஜூலை 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

செய்திக்குறிப்பு:

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவளத் தேவைக்கு நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளனா்.

பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா். 18 முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் நேரில் வந்து கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் க.... மேலும் பார்க்க

இந்தியன் ரயில்வேயில் 6,235 டெக்னீசியன் பணியிடங்கள்: ஆர்ஆர்பி அறிவிப்பு

இந்தியன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 6,235 டெக்னிசியன் கிரேடு-I மற்றும் கிரேடு-III காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் ... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 28 உதவி மேலாளர், சட்ட அலுவலர்,மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

645 குரூப் 2, 2ஏ பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், வனவா், மேற்பார்வையாளர், இளநிலைக் காப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளா், உதவியாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்று... மேலும் பார்க்க

துறைமுக கழகத்தில் மேலாளர், அலுவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியன் துறைமுக கழகத்தில் காலியாகவுள்ள மேலாளர், அலுவலர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.: 2025/SGR/09பணி: Accounts Officer, Grade - Iகாலியிடங்கள் ... மேலும் பார்க்க