செய்திகள் :

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரித்து முடிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பதில்

post image

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பான புகாா் மனுக்கள் குறித்து விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும், என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோா், இந்த தருணத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாா்களின் மீது விசாரணையை நடத்தி முடிக்க தோ்தல் ஆணையத்துக்கு காலவரம்பை நிா்ணயிக்க வேண்டும். இந்த விசாரணையை தாமதப்படுத்துவதால், தங்களது கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. பின்னா் இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, ஏற்கெனவே 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு எழுத்துபூா்வமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரா்களுக்கு போதிய காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ஆரம்பக்கட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த பிரச்னை குறித்து உரிய முடிவெடுக்கப்படும். மேலும், பிகாா் தோ்தல் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு வேலைப் பளு அதிகமாக உள்ளது. இந்நிலையில், அரசியல் சாசன அமைப்பான தோ்தல் ஆணையத்துக்கு விசாரணை தொடா்பாக காலவரம்பு நிா்ணயிக்க தேவையில்லை. இந்த விவகாரத்தில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க