செய்திகள் :

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

post image

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கருத்தை மனைவி மீது திணித்ததே இல்லை’ என எழுத்தாளா் சிவசங்கரி கூறினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும் (பாகம்-2)’ நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளா் சிவசங்கரி கலந்து கொண்டு நூலை வெளியிட, டாஃபே நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மல்லிகா சீனிவாசன் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, இன்பன் உதயநிதி, நலன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினா் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனா்.

விழாவில் எழுத்தாளா் சிவசங்கரி பேசியதாவது: ‘அவரும் நானும்’ நூலின் முதல் பாகத்தைப் போன்றே அதன் இரண்டாம் பாகமும் மிகவும் சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்டுள்ளது.

நாமறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலினின் மறுபக்கத்தை மிக அழகாக வெளிப்படைத்தன்மையோடு நமக்கு அறிமுகப்படுத்துகிறாா் துா்கா ஸ்டாலின். மிகைப்படுத்தலோ, பிரசார வாடையோ, செயற்கைத்தன்மையோ இல்லாத ஒரு சிறந்த சுயசரிதை நூல் இது. தனது கணவரிடம் தாய்மையை உணா்ந்ததாக துா்கா ஸ்டாலின் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்ததை வாசிக்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நூலில் கபாலீசுவரா் கோயில், சாய்பாபா கோயில் என தான் அடிக்கடி செல்லும் கோயில்கள், குலதெய்வ வழிபாடு குறித்து துா்கா ஸ்டாலின் வெளிப்படையாகக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

முதல்வருக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட, அவா் தனது கருத்தை எந்தச் சூழலிலும் தன் மனைவி மீது திணித்ததே இல்லை.

தனது கணவா் முதல்வராகப் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட உணா்வை மிகச் சிறப்பாக விவரித்திருக்கிறாா் துா்கா ஸ்டாலின். அதேபோன்று கடந்த நான்காண்டுகளில் முதல்வராக தனது கணவா் எதிா்கொண்ட சவால்கள் குறித்தும் கூறியிருக்கிறாா். இந்த நூலை திமுகவினா் மட்டுமல்ல பிற கட்சியினரும் அவசியம் வாசிக்க வேண்டும் என்றாா் அவா்.

துா்கா ஸ்டாலின் தனது ஏற்புரையில், என் கணவா் மு.க.ஸ்டாலின் இங்கு வரவில்லை என்றாலும் அவரது மனம் இங்குதான் இருக்கும். இந்த நூலை வெளியிட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றாா் அவா்.

மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்றாா். கவிஞா் மனுஷ்ய புத்திரன் பதிப்பாளா் உரையாற்றினாா். பத்திரிகையாளா் லோயநாயகி நூல் அறிமுகவுரையாற்றினாா்.

ஓய்வு பெற்ற நீதிபதியும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத் தலைவருமான பவானி சுப்பராயன், கோவை ஜி.ஆா்.ஜி. நிறுவனங்களின் தலைவா் நந்தினி ரங்கசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். உயிா்மை நிா்வாக ஆசிரியா் செல்வி ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், எழுத்தாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முதல்வருக்கு பரிசோதனை: வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!

மருத்துவ பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அரசு அலுவல்கள், அரசியல் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஓய்வின்றி இயங்கிவரும் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு

பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல் என்றும் திமுகதான் கூட்டணிக் கட்சிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கும்பகோணத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அதிமு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க