சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!
முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
தமிழ்நாடு முதலமைச்சர் உடல்நிலை காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் இன்னும் மூன்று நாள்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அவருக்கு சில மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நேற்று இரவு அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

காரணம் என்ன?
இந்த நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
"முதலமைச்சர் நன்றாக இருக்கிறார். இரண்டு, மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பயணங்கள், ரோட்ஷோ போன்றவற்றை செய்ததால், கொஞ்சம் தலைசுற்றல் இருந்தது.
மருத்துவர்கள் நன்றாக அவரைப் பார்த்துக்கொள்கிறார்கள். அவர் சிறப்பாக இருக்கிறார்.
இரண்டு நாள்கள் மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க கூறியிருக்கிறார்கள்.
விரைவில், பூரண குணமடைந்து வீடு திரும்புவார். நாளை (இன்று), சில பரிசோதனைகள் எடுக்கப்பட இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
நேற்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் நடைப்பயிற்சி சென்றப்போது, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. இதை பரிசோதிக்க நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.