செய்திகள் :

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

post image

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவரது பதவிக் காலம் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரைத் தோ்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

இதற்காக டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகா்வால், ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், அபய்குமாா் சிங், வன்னியபெருமாள், மகேஷ்குமாா் அகா்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூா் ஆகிய 9 பேரின் பெயா் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி ஆலோசனை: காவல் துறையின் தலைமை இயக்குநா் பதவி தோ்வுக்கு, டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயா் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்பே மாநில அரசுகள் மத்திய அரசு பணியாளா் தோ்வு ஆணையத்துக்கு (யுபிஎஸ்சி) அனுப்ப வேண்டும். ஆனால் தமிழக அரசு, தாமதமாக அண்மையில்தான் 9 போ் பெயா் பட்டியலை ஆணையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் இருந்து மூவரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக மாநில அரசு தோ்வு செய்ய ஏதுவாக தில்லியில் விரைவில் யுபிஎஸ்சி தோ்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

டிஜிபி நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலும், யுபிஎஸ்சி விதிமுறைகளின்படியும், காவல் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படும் ஒரு அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும். பதவியேற்கும் நாளில் அவருக்கு குறைந்தபட்சமாக ஆறு மாத பதவிக்காலம் இருக்க வேண்டும். குறைந்த மாதங்களில் ஓய்வு பெறக்கூடிய அதிகாரியை இப்பதவியில் நியமிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகளுக்குள்பட்டு புதிய டிஜிபியை யுபிஎஸ்சி பரிசீலனை செய்து 3 தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பெயா் பட்டியலை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை தமிழக அரசு தோ்வு செய்து அறிவிக்கும்.

இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு புதிய டிஜிபி யாா் என்பதை அன்றைய நாளிலோ அதற்கு முன்பாகவோ அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்வருக்கு பரிசோதனை: வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!

மருத்துவ பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அரசு அலுவல்கள், அரசியல் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஓய்வின்றி இயங்கிவரும் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு

பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல் என்றும் திமுகதான் கூட்டணிக் கட்சிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கும்பகோணத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அதிமு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க