சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!
பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு
பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல் என்றும் திமுகதான் கூட்டணிக் கட்சிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கும்பகோணத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் பிரசாரத்தில் பேசிய அவர், ”தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணி. 2026 ல் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஸ்டாலின் கனவு காண்கிறார். நிஜத்தில் வெற்றி பெறுவது அதிமுக. 210 தொகுதிகளில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும். கட்டுமான பொருள்கள் விலை உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சியில் இனி கனவில தான் வீடு கட்ட முடியும்.
அ.தி.மு.க. ஆட்சியில் 17 மருத்துவக்கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 50 மாதங்களில் ஒரு மருத்துவக் கல்லுாரிகூட திறக்கப்படவில்லை. 67 கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கொண்டு வரப்பட்டது. 21 பாலிடெக்னிக், 4 இன்ஜினியரிங் கல்லுாரி, 5 வேளாண் மற்றும் 5 கால்நடை மருத்துவக்கல்லுாரி திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு அற்புதமான ஆட்சிதான் அ.தி.மு.க.வின் ஆட்சி.
பழனிசாமிக்கு படிப்பு என்றால் கசக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். படிப்பு இனித்ததால்தான் இத்தனை கல்லுாரிகளை திறந்தோம். முதல்வர் ஸ்டாலின் எத்தனை கல்லுாரிகளை திறந்தார், அ.தி.மு.க. எதுவும் செய்யவில்லை என தி,மு.க., அன்றாட செய்தி மாய தோற்றத்தை உருவாக்கி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக உதயநிதி கூறினார். இப்போது வரை ரகசியத்தை பூட்டி வைத்துள்ளனர். நீட் தேர்வு ரத்தாகி விடும் என இருந்த 25 பேர் இறந்துள்ளனர். இதற்கு ஸ்டாலின் அரசுதான் பொறுப்பு. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டப்பேரவையில் முடியாது என ஸ்டாலின் பேசுகிறார். இது பொய்தானே.
அ.தி.மு.க.வை பா.ஜ.க. விழுங்கி விடும் என ஸ்டாலின் கூறுகிறார். பழனிசாமி என்ன புழுவா, மீன் திண்பதற்கு. கூட்டணியைக் கட்சிகளை ஸ்டாலின் விழுங்கிக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் தேய்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி கண்ணுக்கு தெரியவில்லை. வி.சி.க. காரணம் சொல்லி ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற மக்களே சாட்சி. எனக்கு பல கஷ்டங்களை தந்தார்கள். விவசாயி முதல்வராகி விட்டார். நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதும், ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு நின்றார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. சரித்தர வெற்றி பெறும். அப்போது ஸ்டாலினுக்கு சட்டை மட்டும் அல்ல வேஷ்டியும் காணாமல் போகி விடும்” எனப் பேசினார்.
இதையும் படிக்க: பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ