செய்திகள் :

மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

post image

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே அலுவல்களை கவனித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின் 3 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் சில நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர், பின்னர் மீண்டும் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குத் திரும்பினார்.

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்தே தன்னுடைய அலுவலக வேலைகளை முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருகிறார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் கேட்டறிந்தார்.

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மூலமாக பெறப்பட்ட மனுக்கள், எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன? என்பது குறித்து கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் அரசுத்திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்தவும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வருகிற சனிக்கிழமை வரை ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

நேற்று அமைச்சர்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், பிரதமர் மோடி நேற்று முதல்வரை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க. அழகிரி சென்னை அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வரிடம் நலம் விசாரித்தார்.

TN govt said that Chief Minister M.K. Stalin is taking care of official work from the hospital.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை எப்படி இருக்கிறது? - உதயநிதி பேட்டி

முதல்வரிடம் நலம் விசாரித்த மு.க. அழகிரி!

இரவில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தி... மேலும் பார்க்க

இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 2-ம் இடம்!

தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-ம் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. புள்ளியில் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சகப் புள்ளி விவரங்கள்படி மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமை... மேலும் பார்க்க

ஜூலை 27ல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை?

தமிழகம் வரும் பிரதமர் மோடி வருகிற ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 26 ஆம் தேதி தமிழகம் வரு... மேலும் பார்க்க

சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளினால் ம... மேலும் பார்க்க

சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்: ஸ்ரீவாஸ்தவா உறுதி!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உறுதி அளித்துள்ளார். சென்னை உயர்நீத... மேலும் பார்க்க

2026 தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும்! - இபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக!

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நில... மேலும் பார்க்க