செய்திகள் :

சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

post image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளினால் மண்டல அதிகாரி தனக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க மறுப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், "வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டை தேடியபோது அது காணாமல் போனது தெரிய வந்தது. எனவே, புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு விண்ணப்பித்தபோது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கர், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, 4 வாரங்களில் சீமானுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Madras High Court ordered the Regional Passport Officer to issue a new passport to NTK leader Seeman within 4 weeks.

இதையும் படிக்க | மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சாத்தான் குளம் தந்தை - மகன் வழக்கு: உண்மையைக் கூறுவதாக கைதான காவலர் மனு!

சாத்தான் குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடந்த உண்மைகளைக் கூறுவதாக கைதான காவல் துறை அதிகாரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் முத... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண்களின் விடியோக்கள் பதிவேற்றம்... இனி யாரும் தப்பிக்க முடியாது!

சென்னை உயா்நீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞா் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை 70-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மற்றும் ஆபாச தளங்களில் பகிரப்படுவதைத் தடுக்கவும், அவற்றை ... மேலும் பார்க்க

இரவில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தி... மேலும் பார்க்க

இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 2-ம் இடம்!

தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-ம் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. புள்ளியில் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சகப் புள்ளி விவரங்கள்படி மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமை... மேலும் பார்க்க

ஜூலை 27ல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை?

தமிழகம் வரும் பிரதமர் மோடி வருகிற ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 26 ஆம் தேதி தமிழகம் வரு... மேலும் பார்க்க

சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்: ஸ்ரீவாஸ்தவா உறுதி!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உறுதி அளித்துள்ளார். சென்னை உயர்நீத... மேலும் பார்க்க