செய்திகள் :

சாத்தான் குளம் தந்தை - மகன் வழக்கு: உண்மையைக் கூறுவதாக கைதான காவலர் மனு!

post image

சாத்தான் குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடந்த உண்மைகளைக் கூறுவதாக கைதான காவல் துறை அதிகாரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனுவை தாக்கல் செய்து, தந்தை - மகன் கொலை வழக்கில் உண்மையைச் சொல்கிறேன் என அப்ரூவராக மாறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கரோனா ஊரடங்கின்போது கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

விசாரணையின்போது அவர்கள் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், உண்மை தன்மையைக் கண்டறிய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி 2 ஆயிரம் பக்கம் குற்றப் பத்திரிகையையும் சிபிஐ தாக்கல் செய்தது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கில் நடந்த உண்மைகளை மறைக்காமல் கூறுவதாகவும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை - மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைப்பதால், காவலர்கள் செய்த குற்றங்களைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நீண்டுகொண்டே வந்த இந்த வழக்கில், இது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க