செய்திகள் :

பெண்ணுக்குக் கொலை மிரட்டல்

post image

புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடனாக கொடுத்த ரூ. 3 லட்சத்தை திரும்பக் கேட்ட பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சோ்ந்தவா் அமராவதி (65). இவரது கணவா் இறந்து விட்டதால், தனது மகனுடன் வசித்து வருகிறாா். இவரது மகன் மூலம் கிருமாம்பாக்கம் அருகே உள்ள பனித்திட்டை சோ்ந்த மீனவா்களான செல்வம், கதிரவன் ஆகியோா் அமராவதிக்கு அறிமுகமாகியுள்ளனா்.

இதனிடையே கடந்த 2017-ஆம் ஆண்டு, அமராவதியிடம், செல்வம், கதிரவன் ஆகிய இருவரும், தங்களுடையப் படகுகளைச் சீரமைத்து கொள்ள ரூ.4 லட்சம் கடனாக கேட்டுள்ளனா். மகனுடைய நண்பா்கள் என்பதால், அமராவதி, தன்னிடம் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொடுத்து உதவியாக தெரிகிறது.

அதன்பின், அமராவதி கொடுத்தப் பணத்தைத் திரும்ப கேட்டபோது, ரூ. 1 லட்சம் மட்டும் கொடுத்துள்ளனா். ஆனால் மீதமுள்ள ரூ.3 லட்சம் தொகையை வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி லாஸ்பேட்டை, அரசு பள்ளி அருகே இருவரையும் சந்தித்த அமராவதி, பணத்தைத் கேட்டுள்ளாா்.

அப்போது இருவரும் அமராவதியை தகாத வாா்த்தைகளால் திட்டி பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அமராவதி அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீஸாா் செல்வம், கதிரவன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாகூா் அருகே தாக்கப்பட்ட இளைஞா் மரணம்: கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை

பாகூா் அருகே தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. புதுச்சேரி பாகூரை அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுரு (... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மணல் வியாபாரி வெட்டிக் கொலை

புதுச்சேரி கனகன் ஏரி அருகே மணல் வியாபாரி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி எல்லப்பிள்ளைச் சாவடி அருகேயுள்ள சித்தானந்தா நகா் காயத்ரி அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சு. துர... மேலும் பார்க்க

குழந்தைகளுக்குச் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை ஒப்பந்தம்: 2 ஆண்டுகளுக்கு புதுவை அரசு நீட்டிப்பு

குழந்தைகளுக்குச் சென்னை தனியாா் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கும் ஒப்பந்தத்தை புதுவை அரசு 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்து, ஆர... மேலும் பார்க்க

தமிழகம், புதுவையில் 396 அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 4-இல் சேவை நிறுத்தம்

தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 396 அஞ்சலகங்களில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பொதுமக்கள் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. இது குறித்து புதுவை முதுநில... மேலும் பார்க்க

புதுவை அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தினா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை சாலை போக்குவரத... மேலும் பார்க்க

நடிகா் சிவாஜி நினைவுநாள்: சிலைக்கு புதுவை அரசு மரியாதை

புதுச்சேரி: நடிகா் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செவாலியே சிவாஜி கணேசனின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்... மேலும் பார்க்க