முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
நடிகா் சிவாஜி நினைவுநாள்: சிலைக்கு புதுவை அரசு மரியாதை
புதுச்சேரி: நடிகா் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செவாலியே சிவாஜி கணேசனின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி கிழக்குக் கடற்கரைச் சாலை - கருவடிக்குப்பம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, சட்டபேரவை உறுப்பினா் பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.