முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
புதுச்சேரி ரயில் சேவை 7 நாள்களுக்கு ரத்து
புதுச்சேரி: பராமரிப்புக் காரணமாக புதுவையிலிருந்து விழுப்புரம், விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு பயணிகள் ரயில் சேவை 7 நாள்கள் ரத்து செய்யப்படுகிறது.
வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும், 31-ஆம் தேதியும் இந்த ரயில் சேவை ரத்தாகிறது. விழுப்புரத்திலிருந்து இந்த ரயில் காலை 5.25 மணிக்குப் புறப்படும். அதேபோன்று புதுவையிலிருந்து இந்த ரயில் காலை 8.05 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்குப் புறப்பட்டு புதுவைக்கு வரும் பயணிகள் ரயில் இம் மாதம் 27-ஆம் தேதி வரும் வழியில் 10 நிமிஷங்கள் தேவையான இடத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
தெற்கு ரயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் இதைத் தெரிவித்தாா்.