Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
புதுவை அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தினா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை சாலை போக்குவரத்துக் கழக சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டுப் போராட்ட நடவடிக்கைக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஊழியா்கள் கலந்துகொண்டனா்.