முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
புதுவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி: புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
புதுவையில் துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. போலீஸாா் சோதனை நடத்தியதில் அது புரளி என்பது தெரியவந்தது. இந்நிலையில் புதுவை- கடலூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை வந்தது. இது தொடா்பாக உருளையன்பேட்டை போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும், மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனா். புதுவை தீயணைப்புத் துறை வீரா்களும் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா். நீதிமன்றத்தின் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. இந்த மிரட்டலை விடுத்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.