நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!
எலான் மஸ்க்கின் இரும்புக் குதிரை ‘டெஸ்லா மாடல் ஒய்’.! வாங்கலாமா? வேண்டாமா?!
அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் முதல் விற்பனையகம் மும்பையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) திறக்கப்பட்டது. டெஸ்லா மாடல் ஒய் காரின் சிறப்பம்சங்கள், விலை குறித்து இங்கு பார்ப்போம்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கின் டெஸ்லாவை இந்தியாவிற்கு கொண்டு வர நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த மஸ்க், இந்தியாவில் ஒரு டெஸ்லா தொழிற்சாலையையும் அமைக்க திட்டமிட்டிருந்தார்.
அவரின் கனவு நனவாகும் படி, டெஸ்லா நிறுவனம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக இந்தியாவில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டெஸ்லா நிறுவனம் 24,565 சதுர அடி பரப்பில் முதல் விற்பனையகத்தை திறந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் ரூ.35 லட்சம் வாடகைக்கு இந்த இடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் விற்பனை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் தற்போது தனது கார்களுக்கான பதிவைத் துவங்கியுள்ளது. ஏற்கனவே மும்பை மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தியுள்ளது.
தானியங்கி முறையில் செயல்படும் டெஸ்லா காரில் தற்போது மாடல் ஒய் மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வியக்க வைக்கும் விலையில்..!
அமெரிக்க டாலரில் இதன் விலை 37,490 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.32 லட்சம். ஆனால், அமெரிக்க பொருளுக்கான 100 சதவிகித வரியுடன் டெஸ்லாவின் மாடல் ஒய் ரியர்-வீல் டிரைவ் விலை சுமார் ரூ.59.89 லட்சமாகவும், மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் விலை ரூ.68 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் தானியங்கி அம்சம் கொண்ட காரை வாங்க கூடுதலாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 வண்ணங்கள்!
டீப் புளூ மெட்டாலிக்
ஸ்டெல்த் கிரே
டைமண்ட் பிளாக்
பேர்ல் ஒயிட்
அல்ட்ரா ரெட்
குயிக் சில்வர் உள்ளிட்ட 6 வண்ணங்களில் கிடைக்கின்றன.
வேகம்
மாடல் ஒய் ரியர்-வீல் டிரைவ், மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் இரண்டு காரும் டாப் ஸ்பீட் 201 கீ.மி செல்லும்.
0 முதல் 100 கி.மீ வேகம்
மாடல் ஒய் ரியர்-வீல் டிரைவ் - 5.9 வினாடிகளிலும், மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் - 5.6 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை பெற்றுள்ளது.
15 நிமிட சூப்பர் சார்ஜ்
மாடல் ஒய் ரியர்-வீல் டிரைவ் - 238 கி.மீட்டரும், மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் 267 கி.மீட்டரும் செல்லும்.
பேட்டரி
ரியர்-வீல் டிரைவ் - 63 கிலோ வாட்
லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் - 83 கிலோ வாட்
ஒரு முறை சார்ஜ் செய்தால்..!
ரியர்-வீல் டிரைவ் - 500 கி.மீ.
லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் - 622 கி.மீ
சிறப்பம்சங்கள்
முன்புறம் 15 அங்குல் தொடு திரையும், பின்பக்கம் 8 அங்குல தொடுதிரையும் உள்ளது.
9 ஸ்பீக்கர்கள்
8 வெளிப்புற கேமராக்கள்
டேஷ்போர்டு கேமரா
முன்பக்கம் பவர் ரெக்லைனர் இருக்கைகள்
Tesla Model Y Registration
இதையும் படிக்க :ஜூலை 24-ல் அறிமுகமாகிறது ரியல் மீ 15 ப்ரோ! சிறப்பம்சங்கள் என்னென்ன?