செய்திகள் :

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

post image

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.

கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக திங்கள்கிழமை(ஜூலை 21) மரணமடைந்தார்.

அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலக தர்பார் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்கள், மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்புழாவின் புன்னப்ராவில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை முற்பகல் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அச்சுதானந்தனின் உடல் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுங்கிலும் குவிந்தனர்.

இரவு முழுவதும் கடும் மழையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் குவிந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனால், வெறும் 150 கிலோ மீட்டர் தொலைவை கடக்க சுமார் 22 மணிநேரம் ஆகின.

ஆலப்புழாவின் புன்னப்ராவுக்கு இன்று பிற்பகலில் தான் அச்சுதானந்தனின் உடல் வந்தடைந்தது. அவரது வீட்டில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்னும் சற்றுநேரத்தில் புன்னப்ரா - வயலார் தியாகிகள் நினைவிடத்தில் அச்சுதானந்தன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

கேரள முதல்வர் பினராயில் விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

The funeral procession of former Kerala Chief Minister Achuthanandan, which left Thiruvananthapuram yesterday morning, reached Alappuzha after 22 hours.

இதையும் படிக்க : சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!

பிரம்மபுத்திரா நதியில் அணை: இந்தியா, வங்கதேசத்துக்குப் பாதிப்பில்லை: சீனா

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படும் அணையால் இந்தியா, வங்கதேசத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது. இமயமலைப் பகுதியில் உருவாகி, சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாய்ந்து அரு... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் 25-ஆவது முறையாக கருத்து: விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்

‘இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் 25-ஆவது முறையாக கூறியுள்ளாா். இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும்’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலிய... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல், புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் வரவேண்டிய உடல், வழிநெடுக இருந்த கூட்டம் ... மேலும் பார்க்க

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க