இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை நீட்டிப்பு
மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!
மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது.
தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் நிலையில், பாலம் உடைந்ததால் அந்தக் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அன்சோல் மாவட்டத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் அன்சோல் மாவட்டத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தாமோதர் நதியின் மீது பாலம் அமைத்து தண்ணீர் கொண்டுசெல்லும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதார பொறியியல் துறை மூலம் இந்த ராட்சத குழாய்களில் நகர்புறங்களுக்கான நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக தாமோதர் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. இதில், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களும் உடைந்து நீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதையும் படிக்க | ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு