குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு
தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!
தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின், அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவர்கள், தில்லியில் இன்று (ஜூலை 23) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், டாக்காவில் பள்ளிக்கூடத்தின் மீது போர்விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி, சுமார் 31 பேர் பலியாகினர். இதனால், பலியானோருக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக, இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அறிவிப்பு பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்ட இடத்துக்கு வருகை தந்த பின்னரே வெளியானதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியானது கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவப் படைகளின் அட்டூழியங்கள் மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து உரையாடுவதற்காக, வங்கதேச மனித உரிமை அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!