ஏன் இந்த அநீதி? 3 ஆண்டாக அணியில் இருந்தும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு மறுக்கப்படும் வா...
கண்ணீருடன் வீடியோ... நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு என்ன ஆனது?
நடிகை தனுஸ்ரீ தத்தா வெளியிட்ட விடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தனுஸ்ரீ தத்தா. ஆஷிக் பனாயா ஆஃப்னெ ( aashiq banaya aapne) படத்தின் நாயகியாக அறிமுகமான தனுஸ்ரீ வீரபத்ரா, தூள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, மும்பையில் வசித்துவரும் தனுஸ்ரீ சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கை மேற்கொண்டார். ஆனால், விசாரணையில் நானா படேகர் குற்றமற்றவர் என நிரூபணமானது.
இந்த நிலையில், தனுஷ் தத்தா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுகிறேன். நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் சொன்னால், நேரில் வந்து புகார் அளிக்கச் சொல்கின்றனர். இதனால், மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. 'மீ டூ' (me too) புகாருக்குப் பின்பே நான் இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்படுகிறேன். யாராவது எனக்கு உதவுங்கள்” எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை!!