நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!
மருத்துவமனையிலிருந்து மக்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளை கவனித்து வருகிறார்.
கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகள் குறித்து நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக இன்று(புதன்கிழமை) காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நிலை, மனுக்களின் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் உள்ள பயனாளிகளுடனும் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.