தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்ட அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறி, ஒரு சில நாள்களுக்கு முன்பு, சிறுமி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதால், உடனடியாக அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுமி பூரணமாகக் குணமடையாத நிலையில், அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பியதாக, உறவினர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவமனையில் மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமிக்கு சிறப்பு மருத்துவக் குழு கண்காணிப்பில், இதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவர்களும் தொடர்ந்து உடல்நிலையைக் கவனித்து வந்ததாக, ம
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமியை மா்ம நபா் பின் தொடா்ந்து சென்று கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்த சம்பவத்தில், குற்றவாளியைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டு, குற்றவாளி குறித்து தகவல் சொன்னால் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே, குற்றவாளி குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, சிறுமியின் பின்னால் நடந்து செல்வது மற்றும் சிறுமியை கடத்திச் செல்லும் சிசிடிவி விடியோ வெளியாகியிருந்த நிலையில், அண்மையில் தெளிவான புகைப்படம் பதிவான சிசிடிவி காட்சி காவல்துறைக்குக் கிடைத்தது.
ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில், சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளி எந்தப் பக்கம் தப்பிச் சென்றார் என்று தெரியாமல் இருந்த நிலையிலும், அவர் ஹிந்தியில் பேசியதாக சிறுமி கொடுத்த தகவலின் பேரிலும் தீவிர தேடுதல் பணி நடந்து வருகிறது. குற்றச் சம்பவம் நடந்து 10 நாள்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குற்றவாளியை பிடிக்க முடியாதது காவல்துறைக்குப் பின்னடைவாக உள்ளது. இதுவரை சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் காவல்துறை விசாரணை நடத்தியிருக்கிறது.