தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
தீபாவளிக்கு புடவை: ஜெயலலிதா வழியில் இபிஎஸ்!
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு, பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் இன்று விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது, அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி,
”தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. விவசாயிகளுக்கு நிறைய பிரச்னை இருக்கிறது. நானும் ஒரு விவசாயிதான் என்ற முறையில் அதனை நான் நன்கு அறிவேன். உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அதற்கு உரிய விலை கிடைக்காது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.
நெல், கரும்புக்கு அரசு விலை நிர்ணயம் செய்வதுபோல் மற்ற பயிர்களுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும், உடனுக்குடன் நெல் இயக்கம் செய்யப்பட்டு அதற்கு உரிய பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
ஆனால், தற்போது திமுக ஆட்சியில் நெல்கள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாமல் நாள் கணக்கில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் நெல்மணிகள் முளைத்து வீணாகி விடுகிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
2026 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் இந்த நிலை மாறும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, திருவையாறு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட தேரடி அருகே உள்ள தெற்கு வீதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் பேசுகையில்,"தாய்மார்கள், சகோதரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு நல்ல புடவை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, தாலிக்கு தங்கம் திட்டத்துடன் பட்டுப்புடவை வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருந்த நிலையில், தீபாவளிக்கு புடவை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பெண்கள் வாக்குகளைப் பெறும் வகையில் புதிய அறிவிப்புகளை இபிஎஸ் அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து முடிவு: தமிழிசை பேட்டி