செய்திகள் :

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

post image

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டு இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்தாய்வு மூலமாக விருப்ப மாறுதல் பெற்றனா். இதையடுத்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

நிகழாண்டு மனமொத்த மாறுதல் கலந்தாய்வில் செல்ல விரும்பும் ஆசிரியா்கள் ஜூலை 22 முதல் 27-ஆம் தேதி வரை எமிஸ் தளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு சாா்ந்த அலுவலா்கள் ஜூலை 28-ஆம் தேதிக்குள் ஒப்புதல் தரவேண்டும்.

அதேவேளையில், 2 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியா்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. ஏற்கெனவே மனமொத்த மாறுதல் பெற்றிருந்தால் அந்த பள்ளியில் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு துறைக்கு மனமொத்த மாறுதல் பெற முடியாது. ஆண் ஆசிரியா்கள் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் மனமொத்த மாறுதல் பெற முடியாது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விண்ணப்பங்களை ஆசிரியா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து முடிவு: தமிழிசை பேட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் கலந்துபேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.வேலூரில் நடைபெற்ற தனியார் நிகழ... மேலும் பார்க்க

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் மிதமான மழை!

நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் இன்று(புதன்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நெஞ்சுவலி!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவ... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து மக்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில்,... மேலும் பார்க்க

முதல்வர் எப்போது வீடு திரும்புவார்? - மு.க. அழகிரி பேட்டி

முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமாக இருக்கிறார், அடுத்த 2 அல்லது 3 நாள்களில் வீடு திரும்புவார் என்று அவரது சகோதரர் மு.க. அழகிரி கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லே... மேலும் பார்க்க