அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூலை 23) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நீலகிரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி!