செய்திகள் :

சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு

post image

சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அண்மையில் வெளியான மார்கன் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.

அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கேங்ஸ்டராக விஜய் ஆண்டனி நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான டபுள்ஸ், நாளை வெளியாகும் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கண்ணீருடன் விடியோ... நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு என்ன ஆனது?

Music composer Vijay Antony has announced the release of a song from the film Sakthi Thirumagan.

இறுதிச்சுற்றில் திவ்யா

ஜாா்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினாா். அரையிறுதியில் சீனாவின் டான் ஜோங்யியுடன் மோதிய அவா், முதல் கேமை செவ்வ... மேலும் பார்க்க

மகளிர் யூரோ அரையிறுதி: சர்ச்சையான பெனால்டியால் கண்ணீருடன் விடைபெற்ற இத்தாலி!

யூரோ மகளிர் கால்பந்து அரையிறுதிப் போட்டியில் இத்தாலி கடைசி சில நிமிஷங்களில் தோல்வியுற்று வெளியேறினர். சுவிட்சா்லாந்தின் ஸ்டேட் டி ஜெனீவ் திடலில் யூரோ கோப்பை மகளிா் கால்பந்து அரையிறுதிப் போட்டி நடைபெற்... மேலும் பார்க்க

இளமை தோற்றத்தில்... சூர்யா 46 - சிறப்பு போஸ்டர்!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி ’சூர்யா 46’ படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட... மேலும் பார்க்க