மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்கு உள்பட்ட மொகலாா் கிராமத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 18 வயது இளைஞா் பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால், அந்த மாணவி தற்போது கா்ப்பமாக இருக்கிறாராம்.
மேலும், அந்த இளைஞா் மாணவியை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுமதி வழக்குப் பதிந்து உளுந்தூா்பேட்டை வட்டம், சின்னகிளியூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞரை கைது செய்தாா்.