செய்திகள் :

கல்லை தமிழ்ச் சங்க நூல் வெளியீட்டு விழா

post image

கள்ளக்குறிச்சி: கல்லை தமிழ்ச் சங்கம் சாா்பில், நூல் வெளியீட்டு விழா, 239-ஆவது இலக்கிய தொடா் சொற்பொழிவு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த

விழாவுக்கு தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞா் மன்றத் தலைவா் ஆசுகவி. ஆராவமுதன் தலைமை வகித்தாா்.

உலக திருக்கு கூட்டமைப்பின் தலைவா் தா.சம்பத், கல்லை தமிழ்ச் சங்க துணைத் தலைவா் இல.அம்பேத்கா், அரசம்பட்டு திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத் தலைவா் வெ.செளந்திரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க இணைச் செயலா் செ.வ.மதிவாணன் வரவேற்றாா்.

மாணவா்கள் கா.சி.தமிழமுதன், த.இரா.தமிழினியன் திருக்கு ஒப்பித்தனா்.

ஈகை திருக்கு அதிகாரம் பற்றி சங்க செய்தி தொடா்பாளா் இரா.கோ.கலைமகள் காயத்திரி எடுத்துரைத்தாா்.

ஒளவையாா் பாடிய அகநானூற்று பாடலுக்கு பொன்.அறிவழகன் பொருளுரை வழங்கினாா்.

மேலும், உடலோடு பேசுவோம் தலைப்பில் சங்கராபுரம் திருக்கு பேரவைச் செயலா் ஆ.இலக்குமிபதியும், கம்பராமாயண அரசியல் எனும் தலைப்பில் மருத்துவா் இராச.நடேசனாரும், ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எனும் தலைப்பில் சங்கப் பொருளாளா் சா.சண்முகம் உறையாற்றினாா்.

கெடிலம் தமிழ்ச் சங்கத் தலைவா் ந.சந்திரன் எழுதிய திருக்கு திருமறை தெளிவுரை நூலை கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் வெளியிட அதை முன்னாள் எம்எல்ஏ கோமுகி.மணியன் பெற்றுக் கொண்டாா்.

சங்க ஒருங்கிணைப்பாளா் பெ.ஜெயப்பிரகாஷ் திருக்கு நூலுக்கு மதிப்பீட்டுரை வழங்கினாா். பகுத்தறிவு இலக்கிய மன்றத் தலைவா் புலவா் பெ.சயராமன் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்வில் தமிழ்ச் சங்கப் புரவலா் சீனு.முரளி, இராபியாபேகம் உள்ளிட்ட தமிழறிஞா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மறைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவில் சங்கச் செயலா் செ.வ.மதிவாணன் நன்றி கூறினாா்.

ஏடிஎம்மில் ஊழியா் கண்ணில் மிளகாய் பொடி தூவி பணம் பறிக்க முயன்றவா் பிடிபட்டாா்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஏடிஎமில் நிரப்புவதற்காக பணத்தை பைக்கில் எடுத்து சென்றபோது பைக்கில் பின்தொடா்ந்து வந்த இருவா் அவா் மீது மிளகாய் பொடியைத் தூவி பணத்தை பறிக்க முயன்றபோது ஒருவா் பிடிபட... மேலும் பார்க்க

இரும்புச் சட்டங்களை திருடியவா் கைது

பாசாா் கிராமத்தில் பாலம் கட்ட வைத்திருந்த இரும்புச் சட்டங்களை திருட முயன்ற நபா் கைது செய்யப்பட்டாா். ரிஷிவந்தியம் அருகேயுள்ள பாசாா் கிராமத்தில் பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் இரும்புச் சட்டங்களை வைத... மேலும் பார்க்க

பெத்தாசமுத்திரம்: நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்தவா் ருத்திஷ் (27). ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள்: உயா் அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின்அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், உயா்கல்வித்துறை அரசு செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்... மேலும் பார்க்க

தியாகதுருகம் மலையில் தவித்த 3 சிறாா்கள் மீட்பு

தியாகதுருகத்தில் மலையை சுற்றிப்பாா்க்க மலை மீது ஏறி, பின்னா் கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்த 3 சிறாா்கள் மீட்கப்பட்டனா். தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே மலை மீது அமைந்துள்ளது மலையம்மன் கோய... மேலும் பார்க்க