டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
இரும்புச் சட்டங்களை திருடியவா் கைது
பாசாா் கிராமத்தில் பாலம் கட்ட வைத்திருந்த இரும்புச் சட்டங்களை திருட முயன்ற நபா் கைது செய்யப்பட்டாா்.
ரிஷிவந்தியம் அருகேயுள்ள பாசாா் கிராமத்தில் பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் இரும்புச் சட்டங்களை வைத்திருந்தனா்.
அவற்றை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒருவா் திருடும் நோக்கத்தில் சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தாா்.
இதுகுறித்து சாலைப் பணியாளா் பத்மநாபனுக்கு தெரிய வந்தது. உடனே அங்கு சென்று பாா்த்தபோது, அடையாளம் தெரியாத நபா் இரும்புச் சட்டங்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தாா்.
உடனடியாக அவரைப் பிடித்து, ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில் அவா், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பாக்கம் புதூா் கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் (42) எனத் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அன்பழகனை கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.