மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பி திருட்டு
கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது ஆலத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள மின் மாற்றியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள கம்பியாளா் சரவணன் கடந்த 16-ஆம் தேதி சென்றாராம்.
அப்போது, மின் மாற்றியில் இருந்த ரூ.1,85,00 மதிப்பிலான ஆயில், செம்புக் கம்பி திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக ஆலத்தூா் இள மின் பொறியாளா் (இயக்கமும் பராமரிப்பும்) விசுவநாதனுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.